search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் மரணம்"

    பல்லாவரம் அருகே பாம்பு கடித்து மாணவர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பெரியார் நகரை சேர்ந்தவர் சண்முகையா, இவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார் என்கிற செந்தில் குமார் (17), ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு தனது தந்தையுடன் திரிசூலம் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது ரோட்டோரம் சென்று கொண்டிருந்த பாம்பு சதீஷ் குமாரை கடித்தது. உடனே அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கோவையில் வெயில் கொடுமைக்கு 9-ம் வகுப்பு மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    பொள்ளாச்சியை சேர்ந்தவர் குணசேகரன். லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சிவகார்த்திக் (வயது 15). அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். பள்ளி விடுமுறையை கழிக்க சிவகார்த்திக் கோவை பேரூர் செட்டிபாளையத்தில் உள்ள தாத்தா முனுசாமி வீட்டுக்கு வந்தார்.

    இன்று காலை சிவகார்த்திக் சுட்டெரிக்கும் வெயிலில் விளையாடினார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த தாத்தா- பாட்டி மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பேரனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிவகார்த்திக்கை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வலங்கைமான் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் சந்திரசேகரபுரம் பூண்டி குடியான தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் ராஜேஷ் (வயது 18). இவர் வலங்கைமானில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் 3-வது ஆண்டு படித்து வந்தார்.

    இவர் தினமும் அரசு பஸ்சில் பூண்டியில் இருந்து வலங்கைமான் சென்று வருவார்.

    கடந்த 21-ந் தேதி ராஜேஷ் வலங்கைமான் சென்று விட்டு மாலையில் அரசு பஸ்சில் சந்திரசேகரபுரம் புறப்பட்டார். அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பின்பக்க படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்தார்.

    பஸ் சந்திரசேகரபுரம் பகுதியில் சென்ற போது, படியில் தொங்கியபடி சென்ற ராஜேஷ் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு தஞசையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண்டிதோப்பை சேர்ந்த பஸ் டிரைவர் சுப்பிரமணியனை கைது செய்தனர்.

    மாணவர் பலியான சம்பவம் சந்திரதேகரபுரம் மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த விபத்துக்கு போதிய வசதி இல்லாமல் மாணவர்கள் கூட்டநெரிசலில் பயணம் செய்வது தான் முக்கிய காரணம். எனவே காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பூந்தமல்லி அருகே 4-வது மாடியில் இருந்து விழுந்து என்ஜினீயரிங் மாணவர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா ஜேய்ஷா (18).

    இவர் ராமாவரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாவது ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு வீட்டின் 4-வது மாடிக்கு சென்றார்.

    அங்கு காயப் போட்டிருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தடுப்பு கம்பி எதிர்பாராத விதமாக சரிந்தது.

    இதில் தவறி கீழே விழுந்த வம்சி கிருஷ்ணா ஜோய்ஷா, ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். அவரை போரூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் பரிதாபமாக உயிர் இழந்தார். பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் பலியானர். இந்தநிலையில் கோவை வடவள்ளியை சேர்ந்த கர்ப்பிணி பெண் உள்பட 5 பேருக்கு பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. #DengueFever #Swineflu

    கோவை:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பருவமழை காரணமாக பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி . இவரது மகன் தமிழரசன் (வயது 19). இவர் உடுமலையில் உள்ள அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தமிழரசன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனையடுத்து அவர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    அவரது ரத்தத்தை டாக்டர்கள் சோதனை செய்த போது தமிழரசனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு கொசுவலையுடன் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டு.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு தமிழரசன் பரிதாபமாக இறந்தார்.

    இதனையடுத்து காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க மருத்துவ குழுவினர் தமிழரசன் வசித்த பகுதி, படித்த கல்லூரி ஆகியவற்றில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் கோவை வடவள்ளியை சேர்ந்த கர்ப்பிணி பெண், அவரது கணவர், மாமியார் ஆகியோர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.

    இதற்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர்கள் ரத்த மாதிரியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர்களுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தார். எனவே 3 பேரையும் டாக்டர்கள் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஏற்கனவே கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் பன்றி காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 35 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் என மொத்தம் 37 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    காய்ச்சல் பாதிப்புடன் தினசரி ஏராளமானோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களுக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்புகள் உள்ளதா என பரிசோதனை செய்யப்படுகிறது.

    காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் சுகாதார துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று முகாம் அமைத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் 50 படுக்கையுடன் கொசுவலை கட்டிய சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.

    இங்கு நோயாளிகளுக்கு பாதுகாப்பான முறையில் சிகிச்சைகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. #DengueFever #Swineflu

    மன்னார்குடி அருகே மாங்காய் பறிக்கும் ஆசையில் மரத்தில் இருந்து தவறி விழுந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே உள்ள பருத்தி கோட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுந்தரரேசன் (வயது 10). இவர் அதே பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி இடைவேளை நேரத்தில் பள்ளி வளாகத்தில் நின்ற சுந்தரேசன் அங்கு மாமரத்தில் மாங்காய் காய்த்து தொங்குவதை கண்டதும் அதை சாப்பிட ஆசை பட்டார்.

    இதைத்தொடர்ந்து மரத்தின் கிளை ஏறி மாங்காய்பறித்த சுந்தரேசன் கால் தவறி கீழே விழுந்தார். சுமார் 10 அடி உயரத்தில் இருந்து விழுந்த அந்த மாணவர் படுகாயம் அடைந்தார். அவரை ஆசிரியர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாங்காய் ஆசை மாணவர் உயிரை பறித்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×